கணினி – 21-ஆம் நூற்றாண்டின் சக்ரவர்த்தி


இன்று (டிசம்பர் 2-ம் தேதி) உலக கணினி எழுத்தறிவு தின நாள்.


                                               .எபனேசர்  MCA.,M.Phil, B.Ed
                             உதவி பேராசிரியர், கணினி அறிவியல் துறை
                                            மலங்கர கத்தோலிக்க கல்லூரி   
                                                    மரியகிரி,களியக்காவிளை.
                                                     www.ebanesar.in  Mob:9442304607

21-ஆம் நு}ற்றhண்டின் சக்தி வாய்ந்த வேகமாக இயங்ககூடிய,அனைவராலும் எளிதில் இயக்கக்கூடிய இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை பெருக்குவதற்கும், உலகத் தொடர்பிற்கும் சிறந்த கருவியாக திகழ்கிறது. கணினி அன்றhட வாழ்க்கையில் பயன்படும் அத்தியாவசியமான கருவி. இதை கருத்தில் கொண்டு 2001 ஆம் ஆண்டில் இருந்து உலக கணினி எழுத்தறிவு தினமாக நாம் கொண்டாடி வருகிறேhம். இந்த தினத்தின் முக்கிய குறிக்கோள் மக்களிடையே கணினியை பற்றிய விழிப்புணர்வை அதிகாpக்கவும், கணினியின் தொழில் நுட்பங்களை மக்களுக்கு எடுத்து கூறவும் கொண்டாடப்படும் நாள். கணினியைப் பற்றி குழந்தைகள் முதல் முதியோர் வரை அறிந்து இருப்பது காலத்தின் கட்டாயம். இன்றைய தொழில் நுட்ப உலகில் எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற Nழல் உருவாகியுள்ளது. கணினி இல்லாத துறைகளே இல்லை எனலாம். உலகத்தின் ஒவ்வொரு அசைவும் கணினியால் தீர்மானிக்கப்படுகிறது.
                ஒரு நாடு வளர்ந்த நாடாக மாறுவதற்கு நாம் ஒவ்வொருவருக்கும் கணினி அறிவு இன்றியமையாகிறது. சாதனையாளர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும் உருவாக்கும் ஒரே துறை கணினித்துறை. வணிகம், அறிவியல், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, நாட்டின் பாதுகாப்பு ஆகிய அனைத்து துறைகளிலும் கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கணினி அறிவு மக்களின் வாழ்க்கைத்தரத்தையும், வேலை வாய்ப்பையும் உயரச் செய்கிறது.
                உலகமே கணினி உள்ளங்கையில். வீட்டிலிருந்தபடியே உலகத்தை பார்க்க, மனிதரோடு நேராக பேச, பொருட்களை வாங்க மற்றும் விற்க, அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் நேரலையாக பார்த்து ரசிக்க கணினியின் தொழில் நுட்பமான இணையம் நமக்கு உதவுகிறது. கணினி உலகமே இணையத்தை சார்ந்து இருக்கிறது. இணையம் மனிதனுடைய இதயத்தை இணைக்கிறது. பிhpந்த நண்பர்களை ஒன்று சேர்க்கின்றது. மனதை மகிழ்விக்கின்றது. அறிவை பெருக்குகிறது. சாதனைகளை செய்ய துணை புhpகின்றது. புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க உதவுகிறது. கணினி அறிவு ஒன்றே இணைய உலகத்தில் நம்மை சாதனையாளர்களையும் வெற்றியாளர்களாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாற்றும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
                பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவு திறன் மேம்பட கணினி அறிவு அவசியமாகிறது. இதை உணர்ந்து தான் அனைத்து மாநில அரசும் மாறி வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் கற்பிக்கும் கல்வியை அறிமுகபடுத்தி செயலாற்றி வருகின்றனர். வீட்டில் இருந்தபடியே தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல், வரலாறு,புவியியல் மற்றும் பொது அறிவு என அனைத்துப் பாடங்களையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். கல்லுயில் சேர்ந்து படிக்க வசதி இல்லாத மாணவர்கள் தொலைதூரக்கல்வியை இணையத்தின் உதவியால் கணினி வழியாக பயில கணினி அறிவு ஒரு ஊன்றுகோலாக அமைகிறது.
                கணினி ஒரு ஆசிhpயராக இருந்து செயல்படுவதால் பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியில் இருந்து கணினி கல்வியை அளித்தால் பள்ளி படிப்பை முடிக்கும்போது அடிப்படை கணினி அறிவில் வல்லமை படைத்தவர்களாக மாறுவார்கள். தமிழக கிராமங்களில் 39.72% பள்ளிகளில் மட்டுமே கணினிகள் உள்ளது. இதற்கு காரணம் கணினி அறிவியல் ஒரு பாடமாக அமையாதது. தமிழக அரசு பள்ளிகளில் 1992 ஆம் ஆண்டு +1 மற்றும் +2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடங்களை அறிமுகப்படுத்தியது. மூலைமுடுக்கெல்லாம் கணினி மயமாக மாறிட்டு இருக்கு. ஆனால் அரசு அரசாங்க பள்ளிகளில் தேவையான அளவு கணினி ஆசிhpயர்களை நியமித்து மாணவ செல்வங்களுக்கு கணினி அறிவை வளர்ப்பதற்கு முன் வர வேண்டும்.2011 ஆம் ஆண்டே அரசு பள்ளிகளில் கணினி கல்வியை தமிழக அரசு தொடங்கியது. தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ரூ. 900- கோடி ஒதுக்கீடு செய்துள்ளது நாட்டிலேயே கேரளா கணினி கல்வி அறிவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறிதளவு பின் தங்கியே இருக்கிறது.
                தகவல் தொழில் நுட்பத்தில் தமிழகம் புரட்சிகளை செய்தாலும் கணினி கல்விக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருங்கால இளையோர் சமுதாயத்திற்கு கணினி அறிவை ஆழமாக கற்பிக்க வேண்டும். மாநில அரசு அதற்காக போதிய கணினி ஆசிரியர்களை பணியமர்த்தி கணினி அறிவியலை ஒரு பாடமாக நடத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
                                உலக கணினி தினமாக இன்றைய நாளில் எல்லா மாணவர்களும்,சமுதாயத்தின் அனைத்து மக்களும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாம் ஒவ்வொருவரும் முயற்சிகள் மேற்கொண்டு அதற்கு பணியாற்ற வேண்டும். மனித கணினி என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலாதேவி பிறந்தது நம் நாட்டில் தான்.  
                கணினி அறிவு ஒரு பாமரனை கோடிஸ்வரராக்குகிறது. கணினி அறிவு வளர்ச்சியின் ஒரு படி தான் டிஜpட்டல் இந்தியா. மத்திய அரசின் கனவு திட்டமான எண்ணியல் இந்தியா (Digital India) மூலமாக நமது நாட்டை டிஜpட்டல் மயமாக்கி, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு சேவைகளை கொண்டு செல்வது இதன் முக்கிய நோக்கமாகும்.
                 
                பிறப்பு சான்றிதழை கணினியில் பதித்து தரும் டிஜpட்டல் இந்தியா. இறப்பு சான்றிதழை இணையத்தில் தருவது டிஜpட்டல் இந்தியா. கணினி யுகத்தில் பல தொழில்நுட்பங்கள் இலவசமாக மக்களுக்கு கிடைக்கிறது. முகநூல்  மற்றும் டிவிட்டர் இரண்டுமே தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. உலகம் இன்று கணினி கையில் தகவல்கள் இன்று விரலிடுக்கில் என்று மாற்றியது கூகுள்தான்.

                கணினி தமிழ் வளர்ச்சிக்காக தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. இது கணினிக்கும், தமிழுக்கும் இடையே உள்ள வளர்ச்சியையும்,முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

எத்தனை வெற்றிகளை நாம் கணினி துறையில் அடைந்திருந்தாலும் என்று பாமர மக்களுக்கு கணினி அறிவு கிடைக்கிறதோ அன்று தான் உலக கணினி எழுத்தறிவு தினமாக கொண்டாடுவதில் பெரு மகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
கணினி அறிவு பெறுவோம்,வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

Comments

Popular posts from this blog

About Me

Malankara Catholic College(MCC) proudly announces ‘MCCXIBAS - 2019’, a Mega Science Exhibition cum Aqua Show in our campus from 20th - 24th, August 2019.