இன்று சமூக வலைத்தள தினம் - இதெல்லாம் தெரியுமா?
உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது. ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடை...